செவ்வாய், 10 அக்டோபர், 2017

கிளி

நீண்ட
நாள்
சிறைபிடித்து
வைத்ததால்
என்னவோ
தெரியவில்லை,,,
நீ
என்னை
விடுவித்தும்
மறந்து போனேன்
பறப்பதற்கு......

# கிளி #

----மு. நித்யா.

புத்தகம்

உன்னை
புரட்டி
பார்த்தவர்கள்
எல்லோரும்,,,
புரட்டி
போடுகிறார்கள்
உலகையே....

# புத்தகம் #

மு. நித்யா.

நிலா

நாளை இரவு
மீண்டும்
வருகிறேன் என்று
சொல்லிவிட்டு
சென்றாய்......
நானோ
உன்
வருகைக்காக
காத்திருந்தேன்.....
ஆனால் நீயோ,,
வரவே
இல்லை..
அப்போது தான்
உணர்ந்தேன்
இன்று
அமாவாசை
என்பதை......

# நிலா #

மு. நித்யா.

மழை

கதிரவன்
தாக்கத்தால்
வாடி
இருந்த
செடிகள் கூட,,
இன்று
உன்
வருகையால்
புன்னகையில்
பூத்து
குலுங்குகிறது..

# மழை #

---மு நித்யா.

மின்னல்

தீப்பொறி
போல
வந்து
போவது
ஏனோ
கண்ணிமைக்கும்
நேரம்.....
உன்
தாக்கம்
என்னவோ
பலமணி
நேரம்.....

# மின்னல் #

----மு. நித்யா.

மொட்டுகள்

தேன் குடிக்கும்
வண்டுகளுக்கு கூட
தெரிந்திருக்கிறது,,
இதழ்
விரியும் நேரம்
எப்போது என்று ...
நானோ
அது தெரியாமலே
காத்துக்கொண்டு
இருந்தேன்
என்னையும் மறந்து....

# மொட்டுகள் #

----மு. நித்யா.

நிழல்

நான்
நடக்க,,
நீயும் என்னுடன்
நடந்தாய்...
அதுவரை தெரியவில்லை,
நீ இறுதி வரை
என்னுடன் வர
முடியாது என்று...
நீ மறைய
துவங்கினாய்..
நானும் நீ
வருவாய் என்று
காக்க துவங்கினேன்....
மீண்டும்
வருவாயா.......???

# நிழல் #

----மு. நித்யா.

அம்மா

நான் எப்படி இருப்பேன் என்று கூட
அவளுக்கு தெரியாது...
இருந்தும் என்னை உலகிற்கு
அறிமுகப்படுத்த அன்றே
அவளுடைய உயிருடன்
போராடியவள் அவள்....
ஒரு நாள் 
கோவிலுக்கு வா என்று
நீ அழைத்த போது
வர மனம் இல்லை...
ஏனென்றால்,,,
எனக்கு உயிர் கொடுத்த
கடவுள் நீ என் கண் முன்
நிற்கும் போது,,
எந்த உணர்வும்
இல்லாத
வெறும் கல்லை
எப்படி
வணங்குவது என்று......

# அம்மா #

---மு. நித்யா.

அலைகள்

நான் ஒவ்வொரு முறையும்
கரையின் உச்சம் அடைய
முயற்சி செய்தேன்...
என்னால்
முடியவில்லை...
இருப்பினும்,
நான் ஒருபோதும்
ஓயவில்லை,
என் இலக்கை
அடைய..
எனக்குள் ஒரு
நம்பிக்கை,
ஒரு நாள்
இந்த பிரபஞ்சமே
திரும்பி பார்க்கும் அளவிற்கு
ஆழி பேரலையாக
உருமாறுவேன் என்று....

# அலைகள் #

----மு. நித்யா.

கருப்பு பணம்

நான் வெற்று தாளாக
இருக்கும் போது
என்னை மதிக்கவில்லை...
எனக்கு ஒரு வடிவம் தந்து
அடையாளம் தந்த பிறகு
என் மதிப்பு அதிகமானது...
என் மதிப்பு
கூடியதாலோ என்னவோ
தெரியவில்லை,
என்னை பதுக்க ஆரம்பித்தான்...
அப்போது தெரியவில்லை
இதனால் ஏற்படும் விளைவு
என்னவென்று...
அண்டை நாட்டை
பார்த்த போது தான் தெரிந்தது
என் மதிப்பு என்னவென்று...
என்னை வெளி கொண்டுவர
முயற்சி செய்தான்...
என் நிறத்தை மாற்றி பார்த்தான்,
இருந்தும் ஒரு நிறம் மட்டும்
இன்று வரை
வெளி வரவே இல்லை ......

# பணம் #

---மு. நித்யா.

தண்ணீர்

நான் மழையாக பூமிக்கு
வரும் போது செல்ல வேண்டிய
இடம் தெரியாமல்
இருந்தேன்...
அப்போது நீ
சிறு நீரோடையாக வந்து
வழி காட்டினாய்...
நான் செல்ல வேண்டிய
இடத்தையும் சொன்னாய்....
அதற்காக முயற்சி செய்யாமல்
இருக்கும் போது தான்
தீடீரென்று
எனக்குள் வேகம் வந்தது...
எனக்கான இடத்தை
அடைய சிந்திக்க
துவங்கினேன்...
என்னை
நதியாக மாற்றி
அனைவருக்கும் பயன்படும் படி
உருவெடுக்க
நினைக்கிறேன்...
என்னை
பயன்படுத்தாமல்
இருந்தால்,
ஒரு நாள்
கடலாகவும்
மாறுவேன்.....

# தண்ணீர் #

-----மு. நித்யா.

கனவு

நீ என் கண் முன்
வரும் போது எல்லாம்
சிகரத்தையே தொட்டது போல
முகத்தில் ஒரு ஆனந்தம்..
அப்போது தெரியவில்லை
அது வெறும் கனவு என்று..
ஒரு நாள் என் கனவு
கனவாகவே
போகும் போது தான்
தெரிந்தது,
அதன் வலி என்னவென்று..
இருந்தும் ஏன் அடிக்கடி
வந்து போகிறாய்.....

# கனவு #

-----மு. நித்யா.
நான் முதலில் உன்னை காணும் போது
வெறும் செடியாக  தான் தெரிந்தாய்
உன்னிடம் தினமும் பேச
நமக்குள் ஒரு உறவு,
நீயும் செழித்து பூக்களாய் மலர்ந்தாய்
நானும் மகிழ்ச்சியில் மலர்ந்தேன்
சில காலம் ஆனது
பூக்கள் வேறு இடம் செல்லும்
நாளும் வந்தது
நீ என்னைவிட்டு
பிரிய போகிறாய் என்று
தெரிந்தும்
அதை ஏற்காமல்
என் மனம் தவிக்கிறது.....

# அழகான பூக்கள் #

---மு. நித்யா