வியாழன், 6 ஏப்ரல், 2017

பழமொழிக் கதை-2



கதை :

ஒரு ஊரில் முருகேசன், அவரது மனைவி விஜயா மற்றும் அவரது குழந்தை நந்தினி வசித்து வந்தார;கள். அச்சிறுமி மிகவும் பிடிவாதக்காரி.

ஒரு நாள் அவர; மனைவியையும், மகளையும் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றார;. அங்கே இருவருக்கும் தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி கொடுத்தார;. ஆனால், அந்த சிறுமிக்கு கண்ணை கவரும் வகையில், மிக உயர;ந்த விலையில் ஒரு அழகிய பொம்மை தென்பட்டது. அது எனக்கு வேண்டும் என்று அழ ஆரம்பித்தது.

அச்சிறுமியின் அம்மா, அப்பா இருவரும் சமாதானப்படுத்தியும் நந்தினி கேட்பதாக இல்லை. உடனே அப்பா மகளிடம் வீட்டிற்கு சென்று பணம் எடுத்துட்டு வந்து வாங்கிக்கலாம் என்று சொன்னார;. ஆனால் அச்சிறுமி கேட்பதாய் இல்லை. உடனே அப்பாவிற்கு கோபம் வந்துவிட்டது.

அருகிலுள்ள பிரம்பை எடுத்து அடித்து வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார;. பின்பு அச்சிறுமி பயந்து அமைதியாய் இருந்தாள்.

அப்போது மனைவி, கணவனிடம் ஏங்க குழந்தையை அடிச்சீங்க என்று கேட்டாள். அதற்கு கணவன் உனக்கு பெரியவர;கள் சொன்ன பழமொழி தெரியாதா? கோல் எடுத்தால் தான், குரங்கும் ஆடும் என்று சொல்லுவார்களே அது சரியாகத்தான் உள்ளது என்று மனைவியிடம் சொன்னார;.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக