செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

திருக்குறள் பற்றி புலவர்களின் கருத்து


திருவள்ளுவர்:

                       திருக்குறளை இயற்றியவர் 'திருவள்ளுவர்'. இவரின் வேறு பெயர்கள்: "நாயனார் , தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில் புலவர்" என்பனவாகும்.  

திருக்குறள்:

                       திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்: "முப்பால், உத்திரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை" என்பனவாகும்.


திருக்குறள் குறித்து மற்ற பல புலவர்களின் கருத்து

            "கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
            குறுகத் தறித்த குறள்  -இடைக்காடர்

             "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

              குறுகத் தறித்த குறள்" -ஔவையார்.                                                                       

              "திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு

              உருத்தகு நற்பலகை ஒக்க - இருக்க

              உருத்திர சன்மர் என உரைத்து வானில்

              ஒருக்கஒ என்றது ஓர் சொல்"                                                                                                                                                            -அசரீரி

            "தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட

              பனையளவு காட்டும் படித்தால் - மனைஅளகு

              வள்ளைக்கு உறங்கும் வளநாட! வள்ளுவனார்

              வெள்ளைக் குறட்பா விரி"                                                                                                                                                        - கபிலர் .

 

              "மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்

              மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும்

              தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார்அன்றோ?

              பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்"                                                                                                                                                           -சீத்தலை சாத்தனார்.


              "மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண்அடியால்

              ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் - வால்அறிவின்

              வள்ளுவருந்  தங்குறள்வெண் பாஅடியால் வையத்தார்

              உள்ளுவால் லாம் அளந்தார் ஓர்ந்து"                                                                                                                                                                            -  பரணர்.

             
             "எப்பொருள் யாரும் இயல்பின் அறிவுறச்

                செப்பிய வள்ளுவர் தாம்செப்பவரும் - முப்பாற்குப்

                பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை

                நேர்வனமற்ற(று) இல்லை நிகர்"                                                                                                   - உத்திரசன்ம கண்ணர்.


                 "செய்யா மொழிக்கும் திருவள் ளுவர்மொழிந்த

                  பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே; - செய்யா

            அதற்குஉரியர் அந்தனரே, ஆராயின் ஏனை

            இதற்குஉரியர் அல்லாதார் இல்"                                                                                                                           - வெள்ளி வீதியார்.


           "கான்நின்ற தொங்கலாய்! காசி தந்ததுமுன்

           கூநின்று அளந்த குறள்என்ப - நூன்முறையான்

                வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்

                தாம்நின்று அளந்த குறள்"                                                                                                                                    - பொன்முடியார்.

                 இவ்வாறு திருக்குறள் பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் மேலும் பல புலவர்கள் பாடியுள்ளனர்

8 கருத்துகள்:

  1. தமிழில் தட்டச்சு செய்து வெளியிடும் தங்கள் முதல் பதிவைப் பாராட்டுகிறேன். தொடர்ந்து எழுதுங்க தேவி.

    பதிலளிநீக்கு
  2. நன்று. வாழ்த்துகள். தொடர்க...

    பதிலளிநீக்கு
  3. அருமையான பகிர்வோடு தொடங்கிய தங்களின் தமிழ் எழுத்துகளை வரவேற்கிறேன் தோழி.தொடர்ந்து எழுதுங்க தேவிமா.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பகிர்வோடு தொடங்கிய தங்களின் தமிழ் எழுத்துகளை வரவேற்கிறேன் தோழி.தொடர்ந்து எழுதுங்க தேவிமா.

    பதிலளிநீக்கு